Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிக சத்து நிறைந்த காளானில்… சப்பாத்திக்கு ஏற்ற… ருசியான சைடிஸ் செய்யலாம்..!!

காளான் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

காளான்                         – 1/2 கிலோ
சோள மாவு                 – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி                         – 150 கிராம்
தேங்காய் துருவல்   – 1/4 முடி
பச்சை மிளகாய்         – 4
மிளகாய்த்தூள்           – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                – 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள்             – 1 டீஸ்பூன்
பூண்டு                            – 1
உப்பு                                – தேவையான அளவு
எண்ணெய்                   – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் காளானை எடுத்து, சுத்தம் செய்து, சிறியதாக நறுக்கி எடுத்து  கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.

மேலும்  நறுக்கிய காளான், மிள்காய்த் தூள் , மஞ்சத்தூள், கறிமசலாத்தூள், சோள மாவு, சிறிது உப்பு சேர்த்து நன்கு  விரவி அப்படியே சிறிது நேரம் வைத்து கொள்ளவும்.

பின்பு மிக்சி ஜாரில் பச்சை மிளகாய், பூண்டு, கசகசாவை சேர்த்து நன்கு மிருதுவாக அரைத்து எடுக்கவும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், விரவி வைத்த காளான் கலவையை போட்டு நன்கு பொரித்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வெகும் வரை வதக்கியபின், அதனுடன் அரைத்த கசகசா விழுது, நறுக்கிய தக்காளி சேத்து வதக்கவும்.

பின்பு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இறுதியில் அதனுடன் பொரித்து வைத்திள்ள காளான் துண்டுகளை சேர்த்து, சில  நிமிடங்கள் நன்கு வதக்கியபின், அதில் தேவையான உப்பு சேர்த்து கிளறியதும், கொத்தமல்லி தழையை தூவியபின் இறக்கி, பரிமாறினால் சுவையான காளான் மசாலா ரெடி

Categories

Tech |