கம்பு மோர்க்கூழ் செய்ய தேவையான பொருட்கள்:
கம்பு மாவு – 100 கிராம்
மோர் – 150 மில்லி
சின்ன வெங்காயம் – 10
சீரகம் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் கம்பு மாவை எடுத்து, சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக இல்லாமல் நன்கு கரைத்து கொள்ளவும். பின்பு சின்ன வெங்காயத்தை எடுத்து, தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கரைத்து வைத்துள்ள கம்பு மாவு, உப்பு, சீரகம் சேர்த்து, கைவிடாமல் நன்கு கிளறி, கூழாக காய்ச்சி கொள்ளவும்.
அதன் பின்பு காய்ச்சி வைத்த கூழை நன்கு ஆற வைத்ததும், பிறகு மோர் சேர்த்துக் நன்றாக கலக்கி நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்தும் பறிமாறினால், சுவையான கம்பு மோர்க்கூழ் தயார். மேலும் இதனுடன் பொறித்த கருவாடு அல்லது பொறித்த வற்றலுடன் சேர்த்து சாப்பிடலாம்.