காரச்சேவு செய்ய தேவையான பொருள்கள்:
கடலைமாவு – 2 கிலோ
டால்டா – 200 கிராம்
நல்லெண்ணெய் – 500 கிராம்
மிளகு பொடி – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
அரிசி மாவு – 100 கிராம்
உப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 10 கிராம்
பெருங்காயம் – சிறிதளவு
வெள்ளைப் பூண்டு – சிறிதளவு
செய்முறை:
பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயம், பூண்டு, மிளகுத்தூள், சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், காரச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறிதளவு பிசைந்து வைத்த மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்க்கவும்.
மற்றொரு கரண்டியால், வேகவைத்த சேவை திருப்பி விட்டு, நன்றாக சிவந்ததும் எடுத்து ஒரு நிமிடம் அதில் உள்ள எண்ணெய் வடிய வைத்து எடுத்து பரிமாறினால் சுவையான கார சேவு தயார்.