கற்பூரவள்ளி இலை பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்:
கற்பூரவள்ளி – 20 இலைகள்
எண்ணெய் – தேவையான அளவு
பஜ்ஜி மாவு கலப்பதற்கு:
கடலை மாவு – 1 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கற்பூரவள்ளி இலைகளை ஆய்ந்ததும்,தண்ணீரில் சுத்தம் செய்து,சில நிமிடம் இலைகளை உலர்த்திக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், ருசிக்கேற்ப உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, தேவையான அளவு தண்ணிர் ஊற்றி, பஜ்ஜிக்கு கலக்கும் மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க விட்டபின், அதில் உலர வைத்த கற்பூரவள்ளி இலைகளை ஒவ்வொன்றாக எடுத்து, பஜ்ஜி மாவு பதத்தில் கலந்த கலவையில் இரண்டு பக்கமும் நனைத்து கொள்ளவும்.
இறுதியில் கலந்த மாவில் நனைத்த கற்பூரவள்ளிஇலைகளை, கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு நன்கு வேக வைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால் மொறுமொறுப்பான கற்பூரவள்ளி இலை பஜ்ஜி தயார்.