Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கருமையான முடிவளர வேண்டுமா… அப்போ இந்த ரெசிபிய… வீட்டிலிலேயே எளிதில் செய்யலாம்..!!

கறிவேப்பிலை குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :

கறிவேப்பிலை                           – 1 கப்
மிளகு                                              – 1 தேக்கரண்டி
மணத்தக்காளி வற்றல்          – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு                       – 2 தேக்கரண்டி
கடலைபருப்பு                             – 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி                            – 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி                              – தேவையான அளவு
புளி                                                   –  எலுமிச்சம்பழம் அளவு
உப்பு                                                 – தேவையான அளவு
நல்லெண்ணெய்                       – 1 மேசைக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை            – தாளிக்க

செய்முறை :

முதலில் பாத்திரத்தில் புளியை எடுத்து, தண்ணீர் ஊற்றி, நன்கு கரைத்ததும், வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, உளூத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பை போட்டு வறுத்து, இறக்கி ஆற வைத்து கொள்ளவும்.

மேலும் அதை மிக்சிஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும். அதன் பின்பு  பாத்திரத்தில் புளி கரைசலுடன் அரைத்து வைத்த விழுது, மஞ்சள் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.

பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றலை போட்டு தாளித்ததும்,அதில் கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்கு  கொதிக்க வைத்த கலவையானது, எண்ணெய் மிதந்து, கெட்டியாக வந்ததும் இறக்கி பரிமாறினால், சாதத்துக்கு ஏற்ற சுவையான கறிவேப்பிலை குழம்பு ரெடி.

Categories

Tech |