Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கவுனிஅரிசி அல்வா… ருசிச்சிங்கனா… மெய் மறந்து போவீங்க…!!

கவுனி அரிசி அல்வா செய்ய தேவையான பொருட்கள்: 

கவுனி அரிசி                                            – ஒரு கப்
சர்க்கரை இல்லாத கோவா             – அரை கப்
கோதுமை மாவு                                    – 2 டேபிள்ஸ்பூன்
நெய்                                                            –  கால் கப்
வெல்லம்                                                 – ஒரு கப்
முந்திரி திராட்சை                              – தேவைக்கேற்ப
பாதாம்                                                      – தேவைக்கேற்ப
பால்                                                           – 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து அதில்  நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுக்கவும். அதே வாணலியில் கவுனி அரிசி மாவு, கோதுமை மாவு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்  வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கரையும் அளவுக்கு கொதிக்க விடவும்.

அதன் பின்பு  அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் வறுத்த கவுனி அரிசி மாவு, கோதுமை மாவு, பால், வெல்லக் கரைசல், சர்க்கரை சேர்க்காத கோவாவை சேர்த்து கை விடாமல் கிளறவும்.

இறுதியில் அதனுடன் நெய்விட்டு நன்கு கிளறவும். பிறகு கலவையானது  வாணலியில் ஒட்டி கொள்ளாமல் வரும் வரை கிளறவும்.

பிறகு அதனை அடுப்பிலிருந்து இறக்கியவுடன், இறுதியில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம், போன்றவை தூவினால் சுவையான கவுனி அரிசி அல்வா ரெடி.

Categories

Tech |