Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான ருசியில்… சத்தான… கேழ்வரகுப் பணியாரம்..!!

கேழ்வரகுப் பணியாரம் செய்ய தேவையான பொருள்கள்:

கேழ்வரகு மாவு                – 1 கப்
உளுந்து மாவு                    – கால் கப்
கடுகு                                       – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு                 – அரை டீஸ்பூன்
தேங்காய்                              – அரை மூடி
கொத்தமல்லித்தழை     – சிறிதளவு
கறிவேப்பிலை                   – ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய்               – தேவையான அளவு
உப்பு                                         – தேவையான அளவு

செய்முறை:

முதலில்  பாத்திரத்தில் கேழ்வரகு மாவையும், உளுந்து மாவையும்  எடுத்து  ஒன்றாகச் சேர்த்து  நன்கு கலந்து கொள்ளவும்.  பின்பு தேங்காயை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

அதன்  பின்பு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து போட்டு நன்கு தாளித்துக் கொள்ளவும்.

மேலும் அதனுடன் நறுக்கிய தேங்காய்த் துண்டுகளை சேர்த்து, வதங்கும் அளவுக்கு பிரட்டியபின் இறக்கி, கலந்த வைத்துள்ள மாவில் சேர்த்ததும்,அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் லேசாக எண்ணெய் ஊற்றி  நன்கு சூடானதும், கலந்து வைத்துள்ள மாவில், ஒவ்வொரு கரண்டியாக எடுத்து பணியார கல்லின் குழிகளில் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.

பின்பு அதில் ஊற்றி மாவானது நன்கு வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு நன்கு வேகவைத்து எடுத்து பரிமாறினால் ருசியான கேழ்வரகு பணியாரம் ரெடி.

Categories

Tech |