கேரளா முட்டை அவியல் செய்ய தேவையான பொருட்கள்:
அவித்த முட்டைகள் – 4
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
அரைக்க:
தேங்காய் – கால் கப்
சின்ன வெங்காயம் – 5
காய்ந்த மிளகாய் – 3
சீரகம் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை:
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து முட்டையை போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து, தோல் நீக்கி, எடுத்து கொள்ளவும். பின்பு வெங்காயம், தேங்காயை எடுத்து சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பிறகு நறுக்கிய தேங்காயை துண்டுகள், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம், மஞ்சள் தூளை எடுத்து மிக்சி ஜாரில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து, கெட்டியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தும், அதில் அரைத்து வைத்த மசாலா கலவையை போட்டு நன்கு வதக்கியபின், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கிளறி கொதிக்க விடவும்.
அதன் பின்பு கொதிக்கின்ற கலவையானது பச்சை வாசனை போன பின்பு, அதில் அவித்த முட்டையை இரண்டு துண்டுகளாக வெட்டிபோட்டு நன்கு கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து, சில நிமிடம் கழித்து கொத்த மல்லித் தழையை தூவி இறக்கி பரிமாறினால் ருசியான கேரளா முட்டை அவியல் தயார்.