Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பார்த்ததும்… சாப்பிட தூண்ட வைக்கும்… அனைவருக்கும் பிடித்த ருசியான சிக்கன் ரெசிபி… செய்து அசத்துங்க..!!

கேஎஃப்சி சிக்கன் ரெசிபி செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன்                                           – 1 கிலோ
இஞ்சி பேஸ்ட்                           – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட்                          – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ்                             – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ்                               – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ்                           – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள்                                 – 1 டீஸ்பூன்
உப்பு                                               – 1  1/2 டீஸ்பூன்
தண்ணீர்                                       – 1 கப்

மாவிற்கு:

மைதா                                          – 1  1/2 கப்
முட்டை                                      – 1
மஞ்சள் தூள்                             – 1/2 டீஸ்பூன்
தண்ணீர்                                      – 2 கப்
மிளகு தூள்                                – 1/2 டீஸ்பூன்
உப்பு                                              – தேவையான அளவு

கோட்டிங்கிற்கு: 

பிரட் தூள்                                – தேவையான அளவு
எண்ணெய்                              – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் சிக்கனில் லெக் பீஸ், மார்பக பீஸ் இதில் எதாவது ஒரு துண்டுகளை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். மேலும் ஒரு பிளேட்டில், பிரட்டை துண்டுகளை எடுத்து, தூளாக நன்கு உதிர்த்து எடுத்து கொள்ளவும்

பிறகு ஒரு சின்ன கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு நுரைபொங்க அடித்து எடுத்து கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டை எடுத்து துண்டுகளாக நறுக்கி மிக்சிஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் நறுக்கிய  சிக்கன் துண்டுகளை போட்டபின், தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், மிளகு தூள், தேவையான அளவு உப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகும் வரை சில நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை, 2 கப் தண்ணீர் ஊற்றி, சிக்கனை முக்கி எடுக்கும் அளவுக்கு, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

அதன் பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதனுடன்  பொரித்து எடுக்கும் அளவுக்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

மேலும் அதனுடன்  வேக வைத்த சிக்கன் துண்டை எடுத்து, கலந்து வைத்த மைதா மாவில் நனைத்து , பிரட் தூளில் சிக்கனை சுற்றிலும் பிரட்டி எடுக்கவும்.

இறுதியில் பிரட்டிய சிக்கனை கொதிக்கின்ற எண்ணையில் போட்டு, மொறு மொறுப்பாகவும்,பொன்னிறமாகவும் பொரித்து எடுத்து பரிமாறினால் குழந்தைகளுக்கு பிடித்த ருசியான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!

Categories

Tech |