Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான ருசியில்…குஜராத்தி ஸ்பெஷல்…காண்ட்வி ரெசிபி..!!

காண்ட்வி செய்ய தேவையான பொருள்கள்:

கடலை மாவு                        – 2 கப்
வெண்ணெய்                         – 4 கப்
மஞ்சள் தூள்                          –  1 டீஸ்பூன
உப்பு                                           –  1 சிட்டிகை
பெருங்காயம்                        –  1 சிட்டிகை
எண்ணெய்                              – 2 டீஸ்பூன்
பால்                                            – 1/4 கப்

அலங்கரிக்க:

சீரகம்      –                                 – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை                     – சிறிது
கொத்தமல்லித் தழை       – சிறிது
பச்சை மிளகாய்                    – 3
கடுகு                                          – 1/2 டீஸ்பூன்
எள்                                              – 1/2 டீஸ்பூன்,
துருவிய தேங்காய்             – 1 டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணெய், பால், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மேலும் கருவேப்பிலை,கொத்தமல்லித் தழையை சிறியதாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பின்பு  ஒரு தட்டில் எண்ணெய் தடவியபின்,அதில் கலந்து வைத்த மாவை மெல்லியதாக ஊற்றி, அதை குக்கரில் வைத்து நன்கு வேக வைக்கவும். அதன் பின்பு தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும்.

அதனை அடுத்து குக்கரில் வைத்த கலவையானது நன்கு வெந்தவுடன், அதை மெல்லியதான அளவில், நீள  நீளமாக வெட்டி எடுத்து, ரோல் செய்து கொள்ளவும்.

மேலும்  அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, சீரகம், எள்,  நறுக்கிய பச்சை மிளகாயை  சேர்த்து நன்கு  வதக்கிய பின்பு, அதை அப்படியே எடுத்து ரோல் செய்த கலவையின் மேல் ஊற்றவும்.

இறுதியில் அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி, துருவிய தேங்காய் சேர்த்து அதன் மேல் அலங்கரித்தபின், பரிமாறினால் சுவையான காண்ட்வி ரெடி.

Categories

Tech |