கிர்ணி ஜூஸ் செய்ய தேவையான பொருள்கள்:
கிர்ணி பழம் – 1
பால் – 500 மில்லி
சர்க்கரை – 100 கிராம்
செய்முறை:
முதலில் கிர்ணி பழத்தை எடுத்து, அதன் சுற்றிலும், தோல் சீவியபின், சிறு துண்டுகளாக வெட்டி, எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் வெட்டிய கிர்ணி பழத்துண்டுகள், சர்க்கரையை சேர்த்து மையாக அரைக்கவும்.
மேலும் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பாலை ஊற்றி, கொதிக்க வைத்து, நன்கு காய்ச்சி இறக்கி, ஆற வைக்கவும்.
பின்னர் அரைத்த கலவையில், ஆற வைத்த பாலை ஊற்றி நன்கு கலக்கி, பிரிட்ஜில் வைத்தோ அல்லது ஐஸ் கியூப்பை போட்டோ, பரிமாறினால் ருசியான கிர்ணி ஜூஸ் ரெடி.