Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கிவி பழத்தில்… கோடைக்கு ஏற்ற… ருசியான ஐஸ்கிரிம் செய்து அசத்துங்க..!!

 கிவி ஐஸ்க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்:

கிவி பழம்                      – ஒரு கப்
பைனாப்பிள் ஜூஸ்  – 2 கப்
சர்க்கரை                        – அரை கப்
ஐஸ்கட்டிகள்               – 5

செய்முறை:

முதல்ல கிவி பழத்தை எடுத்து, மெல்லியதாக தோல் நீக்கியபிறகு, துண்டுகளாக நறுக்கியதும், அதில் பாதியை மட்டும் மிக்சிஜாரில்ல போட்டு மையாக அரைச்சதும் ஒரு பாத்திரத்துல உற்றிக்கிடணும்.

பிறகு அரைச்சி ஊற்றி வச்ச அரை கப் கிவி பழத்துடன்,  பைனாப்பிள் ஜூஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கிக்கணும்.

பிறகு அடுப்புல  கடாயை வச்சி கலக்கி வச்ச கலவையை ஊற்றினதும்,  நல்லா கொதிக்க ஆரம்பித்ததும், கரண்டியால் நன்கு கலக்கி விட்டு கெட்டியாக கூழ்பதம் வரும் வரை கிளறி விட்டு, கெட்டியானதும் இறக்கி ஆற வைக்கணும்.

மேலும் ஆற வச்ச கலவையில், மீதமுள்ள நறுக்கிய கிவி பழத்துண்டுகளை போட்டு, நன்கு கலந்து ஒரு பவுலில்  ஊற்றி,  ஃப்ரீசரில் வைத்து 6 மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறினால், ருசியான கிவி ஐஸ்க்ரீம் ரெடி.

Categories

Tech |