Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோதுமையில்… காரசாரமான ருசியில்… மொறுமொறுப்பான உசிலி உருண்டை செய்யலாம்..!!

கோதுமை உசிலி செய்ய தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு                      – 1 கப்
அரிசி மாவு                                 – 3 டீஸ்பூன்
முழு உளுந்து                            – 1 கப்
கடலை பருப்பு                           – 3/4 கப்
பச்சை மிளகாய்                        – 3
கறிவேப்பிலை                          – ஒரு கைப்பிடி
கடுகு                                               – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம்                             – சிறிதளவு
எண்ணெய், உப்பு                      – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் உளுந்து, கடலை பருப்பையும் சேர்த்து  1 மணி நேரம் நன்கு  ஊற வைக்கவும்.

பின்பு மற்றோரு பாத்திரத்தில்  கோதுமை மாவையும், அரிசி மாவையும்  எடுத்து நன்கு  கலந்து,  சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து சிறு உருண்டைகளாக  உருட்டி கொள்ளவும்.

அதன் பின்பு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, உருண்டைகளாக பிடித்து வைத்த மாவை, இதில் வைத்து நன்கு ஆவியில் வேகவைத்து எடுத்து, பின்னர் ஒரூ தட்டில் உதிர்த்து கொள்ளவும்.

மேலும் ஊற வைத்துள்ள பருப்போடு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சிஜாரில்  கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

பிறகு அதே இட்லி பாத்திரத்தில் இந்த கலவையை வைத்து நன்கு ஆவியில் வேக வைத்து எடுத்து, உதிர்த்து கொள்ளவும்.

இறுதியில் அடுப்பில்  வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, பருப்பு கலவை, வேக வைத்த மாவு உருண்டைகளை போட்டு, நன்கு வதக்கி எடுத்து வைத்து பரிமாறினால் சுவையான கோதுமை உசிலி ரெடி.

Categories

Tech |