Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் எடை சட்டுன்னு குறையணுமா ? அப்போ… இந்த ரெசிபிய ட்ரை பண்ணி பாருங்க..!!

கோவைக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

கோவைக்காய்            – 100 கிராம்
பச்சை மிளகாய்          – 3
புளி                                    – நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம்   – 10
பெருங்காயதூள்         – 1/4 சிட்டிகை
நல்லெண்ணெய்        – 50 மில்லி
கடுகு, உப்பு                   – சிறிதளவு
கறிவேப்பிலை           – ஒரு கைபிடி

செய்முறை:

கோவைக்காயை பொடியாக நறுக்கியபின், அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, அதில் நறுக்கிய கோவைக்காயை போட்டு,  ஆவியில் நன்கு வேக விட்டு, எடுத்து ஆற வைக்கவும்.

பின்பு மிக்சிஜாரில் ஆற வைத்த கோவைக்காய், சிறிதளவு புளியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி அதையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, அதில் கடுகு, பெருங்காயதூள், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும்,அதில் அரைத்த கோவைக்காய்  கலவையும், சின்ன வெங்காய கலவையும் போட்டு  உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு கிளறி கொள்ளவும்.

பின்பு கிளறிய கலவையானது, கெட்டியாக வரும் வரை நன்கு கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறினால் சுவையான கோவைக்காய் சட்னி  ரெடி.

Categories

Tech |