Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சப்பாத்திக்கு ஏற்ற சைடிஸ்… கோவைக்காய் வறுவல் ரெசிபி..!!

கோவைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள் :

கோவைக்காய்                  – கால் கிலோ
மஞ்சள்தூள்                        – கால் ஸ்பூன்,
மிளகாய்த்தூள்                 – தேவைக்கேற்ப,
சீரகக்தூள்                            – ஒரு டீஸ்பூன்,
தனியாத்தூள்                    – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை                 – சிறிதளவு,
எண்ணெய்                         – தேவைக்கு
உப்பு                                      – தேவையான அளவு.

செய்முறை :

முதலில் பாத்திரத்தில்  கோவைக்காயை எடுத்து  நன்கு கழுவி,அதை  நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

பின்பு  அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு  பிசிறி சில  நிமிடம் அப்படியே வைக்கவ

பின்பு  கடாயை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை போட்டு, சில நிமிடங்கள் மூடிவைத்து வெந்ததும் எடுத்து சிறிது கிளறி இறக்கி பரிமாறினால் சுவையான  கோவைக்காய் வறுவல் ரெடி.

Categories

Tech |