கோவைக்காய் சாதம் செய்ய தேவையான பொருள்கள்:
பச்சைஅரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – 1
கோவைக் காய் – 100 கிராம்
தேங்காய்த் துருவல் – 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
கடுகு, உளுந்து – சிறிதளவு
கடலைப் பருப்பு – சிறிதளவு
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பெரிய வெங்காயம், கோவைக்காயை எடுத்து நீளமாக வெட்டி கொள்ளவும். பின்பு தேங்காயை எடுத்து துருவி கொள்ளவும்.
அதன் பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
மேலும் அதனுடன் நறுக்கிய கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கியதும், பின்பு அதனுடன் எலுமிச்சம் சாறு சேர்த்து நன்கு கிளறி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
பின்பு அதில் பச்சை அரிசியை போட்டு ஒருகொதி வந்தவுடன் 10 நிமிடம் கழித்து நன்கு கிளறியபின் இறக்கி பரிமாறினால் ருசியான கோவைக்காய் சாதம் தயார்.