குதிரைவாலி புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி – ஒரு கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது– 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
தேங்காய்ப்பால் – ஒரு கப்
கிராம்பு, ஏலக்காய் – தலா 2
பட்டை – 2
செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கியபின், சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் பின்பு தக்காயை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பின்பு பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியை போட்டு சுத்தம் செய்து, அரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
மேலும் அடுப்பில் குக்கரை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, ஏலக்காய், பட்டை போட்டு தாளித்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு நன்கு வெங்காயம் வதங்கியபின் இஞ்சிப் பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கியதும், அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் கிளறி விடவும்.
அடுத்து அதில் தேங்காய்ப்பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்தபின், ஊற வைத்த குதிரைவாலி அரிசியை சேர்த்ததும், குக்கரின் மூடியை வைத்து நன்கு வேக விடவும்.
பிறகு குக்கரில் வேக வைத்த கலவையானது நன்கு வெந்ததும் , முடியை திறந்து லேசாக கிளறி விட்டு இறக்கி வைத்து பரிமாறினால் ருசியான சுவையில் குதிரைவாலி புலாவ் ரெடி. தேவைப்பட்டால் எண்ணெயில் முந்திரியை வறுத்து அதில் சேர்த்து கொள்ளலாம்.