வெண்டைக்காய் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 10
கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன
மாங்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை தண்ணிரில் நன்கு கழுவியபின், துணியால் துடைத்து, நீள நீளமாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
பின்பு பாத்திரத்தில் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு, அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மாங்காய் தூள், கடலை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு விரவி கொள்ளவும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் விரவி வைத்துள்ள வெண்டைக்காயை துண்டுகளை எடுத்து சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக நன்கு பொரித்து எடுத்து பரிமாறினால் சுவையான வெண்டைக்காய் சிப்ஸ் தயார்.