மாந்தல் கருவாட்டு ப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
மாந்தல் கருவாடு – 6 துண்டுகள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிது
செய்முறை:
முதலில் இஞ்சியை துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி துண்டுகள், பூண்டை போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
அதன் பின்பு பாத்திரத்தில் மாந்தல் கருவாட்டை எடுத்து சுடு தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் .
பிறகு அதனுடன் அரைத்த இஞ்சி, பூண்டு பேஸ்ட், சிவப்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கி சிறிது நிமிடம் நன்கு உற வைக்கவும்
மேலும் அடுப்பில் தோசை கல்லை வைத்து, அதில் உற வைத்திருந்த கருவாடை போட்டு, சிறிது எண்ணெய் ஊற்றி, நன்கு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து பரிமாறினால், ருசியான மாந்தல் கருவாட்டு ப்ரை ரெடி.