மல்பூரி செய்ய தேவையான பொருள்கள்:
மைதா மாவு – 2 கப்
அரிசி மாவு – கால் கப்
சோடா உப்பு – 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் – அரை தேக்கரண்டி
தயிர் – 1 கப்
சீனி – 2 கால் கப்
டால்டா அல்லது நெய் – தேவையான அளவு
செய்முறை:
பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு எடுத்து, அதனுடன் தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து பணியார மாவு போல நன்கு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் சீனியை சேர்த்து, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, அதனுடன் கேசரி பவுடரை சேர்த்து, கொதிக்க வைத்து, பாகு கம்பிப் பதமாக வந்ததும் இறக்கி விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கரைத்து வைத்திருக்கும் மாவில், ஒரு கரண்டி எடுத்து அதில் போட்டு வேக வைத்து, அதனை பொரித்து எடுத்து, சீனிப் பாகில் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து, பின்பு எடுத்து பரிமாறினால் சுவையான மல்பூரி தயார்.