மணத்தக்காளி கீரை கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை – 1 கட்டு
பாசிப்பருப்பு – 1/2 கப்
தேங்காய் – 1 மூடி
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
வரமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் மணத்தக்காளி கீரையின் இலைகளை ஆய்ந்து எடுத்து சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பின்னர் தேங்காயை கீறி துண்டுகளாக நறுக்கி, மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து, தண்ணீர் ஊற்றி நன்கு பிளிந்து தேங்காய்பாலை மட்டும் எடுத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஆய்ந்து வைத்த மணத்தக்காளி கீரை, பாசிப்பருப்பு, சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து, அதனுடன் தேங்காய் பால் சேர்த்து, நன்கு கொதித்ததும்,லேசாக கடைந்து கொள்ளவும்.
அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து நன்கு தாளித்து எடுத்து, கடைந்த கீரையில் ஊற்றி சிறிது கிளறியபின் பரிமாறினால், சுவையான மணத்தக்காளி கீரை கூட்டு தயார்.