Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த ரெசிபிய மட்டும் செய்து சாப்பிடுங்க… இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதோடு… வயிற்றிலுள்ள புண்ணையும் டக்குன்னு குறைக்கும்..!!

மணத்தக்காளிக்கீரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:

மணத்தக்காளிக்கீரை        – ஒரு கட்டு
வெங்காயம்                           – 2
தேங்காய் துருவல்             – 2 டீஸ்பூன்
கடுகு                                         –  அரை டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு                  –  ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்                – 1
எண்ணெய், உப்பு                – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மணத்தக்காளி கீரையின் இலைகளை மட்டும் பாத்திரத்தில் ஆய்ந்து எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு வெங்காயத்தை எடுத்து தோல் நிக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மேலும் தேங்காயை எடுத்து பொடியாக துருவி எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு தாளித்ததும், அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். மேலும்  வெங்காயம் நன்கு வதங்கியபின், சுத்தம் செய்த மணத்தக்காளி கீரையை  போட்டு நன்கு வதக்கவும்.

இறுதியில் கீரை நன்கு வதங்கியதும், துருவிய தேங்காயை போட்டு, தேவையான அளவு உப்பு தூவி கரண்டியால் தேங்காயின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறிவிட்டபின் கெட்டியானதும் இறக்கி பரிமாறினால் ருசியான மணத்தக்காளிக்கீரை பொரியல் ரெடி.

Categories

Tech |