Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அல்சரினால்… வயிற்றில் புண் ஏற்பட்டுள்ளதா ? இதோ உடனடி தீர்வு… எளிதில் குணமாகும்..!!

மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்ய தேவையான பொருள்கள்:

சின்ன வெங்காயம்                 – 100 கிராம்
மணத்தக்காளி வற்றல்        – 50 கிராம்
பூண்டு                                           – 10 பல்
புலி                                                 – தேவையான அளவு
உப்பு                                               – தேவையான அளவு
கருவேப்பிலை                         – தேவையான அளவு
மிளகாய்த்தூள்                         – ஒரு டீஸ்பூன்
மல்லித் தூள்                             – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                             – அரைடீஸ்பூன்
தேங்காய்                                    – சிறிய துண்டு
மிளகு                                           – 10
சீரகம்                                           – அரை டீஸ்பூன்
தக்காளி                                       – 1
நல்லெண்ணெய்                    – 5 டீஸ்பூன்
கடுகு                                            – சிறிதளவு
வெந்தயம்                                 – சிறிதளவு

செய்முறை:

சின்ன பூண்டு  வெங்காயத்தை எடுத்து பூண்டினை தோலுரித்து வைக்கவும். பின்பு தேங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு மிக்ஸிஜாரில் நறுக்கிய தேங்காய், மிளகு, சீரகம், சேர்த்து நன்கு மையாக  அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, போட்டு தாளித்ததும், அதனுடன் வத்தலை இரண்டாக கிள்ளி போட்டு நன்கு வதக்கவும்.

மேலும் அதனுடன் நறுக்கிய  சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி  போட்டு வதக்கி கொள்ளவும். பின்னர் அதில் மிளகாய்த்தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் தூவி நன்கு வதக்கவும்.

இறுதியில் அதனுடன் புளியை கரைத்து ஊற்றி, அரைத்த கலவையை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.  மேலும் கொதித்தக் கலவையானது  கெட்டியானதும், இறக்கி பரிமாறினால் சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார்.

Categories

Tech |