மாம்பழ பிர்னி செய்ய தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த மாம்பழம் – 2
அரிசி – 2 டேபிள் ஸ்பூன்
கெட்டியான பால் – 3 கப்
சர்க்கரை – தேவையான அளவு
ஏலப்பொடி – சிறிதளவு
பாதாம், பிஸ்தா – 4
சாரைப்பருப்பு – சிறிதளவு
தேன் – சிறிதளவு
செய்முறை:
முதலில் மாம்பழங்களை எடுத்து தோல் சீவியபின், அதில் உள்ள விதையை நீக்கி விட்டு, துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்து சில நிமிடம் நன்கு ஊறவைத்து, அதில் உள்ள அரிசியை மட்டும் வடிகட்டி, மிக்சிஜாரில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, அதில் அரைத்த அரிசி விழுதைச் போட்டு கட்டி வராமல் நன்கு கலந்ததும், வேகவைத்த அரிசியானது நன்கு வெந்து நிறம் மாறி வந்ததும், அதில் ருசிக்கேற்ப தேனை ஊற்றியதும் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, இறக்கி வைத்து லேசாக ஆற வைக்கவும்.
பின்னர் நறுக்கிய மாம்பழங்களை சிறிதளவு அலங்கரிக்க வைத்து விட்டு, மீதி உள்ள பழங்களை நன்கு பிசைந்து கூழ் போல கரைத்ததும்,அதை இறக்கி ஆற வைத்த கலவையில் ஊற்றி நன்கு கலந்ததும் 2 நிமிடம் மூடி வைத்தபின், அதில் அலங்கரிக்க வைத்த மாம்பழ துண்டுகள், பாதம், பிஸ்தா, சாரைப் பருப்புகளைத் தூவி அலங்கரித்து கொள்ளவும்.
மேலும் தேவைபட்டால் பிரீசரில் வைத்து, சில நிமிடம் கழித்து எடுத்து, சில்லென்று பரிமாறினால் ருசியான மாம்பழ பிர்னி ஜூஸ் ரெடி.