Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மாம்பழ அல்வா… புளிப்பு தன்மை இல்லாத வகையில்…!!

மாம்பழ கூழ்                       – 2 கப்
சர்க்கரை                               – ஒரு கப்
நெய்                                        – அரை கப்
சோள மாவு                         – 1 ஸ்பூன்
பாதாம், முந்திரி                – தேவைக்கு
ஏலக்காய் தூள்                  – கால் தேக்கரண்டி

செய்முறை :

முதலில் கிண்ணத்தில் பாதாம், முந்திரியை எடுத்து  பொடியாக நறுக்கி கொள்ளவும்.  பாத்திரத்தில் சோள மாவை எடுத்து,  கால் கப் தண்ணீரில் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும்.

பின்பு  மாம்பழத்தை எடுத்து கொட்டை இல்லாமல் விழுதாக மிக்சிஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.

அதனை அடுத்து, பாத்திரத்தை அடுப்பில் வைத்து  நெய் ஊற்றியதும்,  மாம்பழ விழுதை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும்.

பின்பு அடுப்பிலுள்ள மாம்பழ கலவையானது  நன்கு  கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சோள மாவு கரைசலை ஊற்றி நன்கு  கைவிடாமல் கிளறவும்.

அதன் பின்பு வேகவைத்த கலவையை 5 நிமிடத்திற்கு ஒருமுறை 1 ஸ்பூன் நெய்யை ஊற்றி கிளறிவிட்டு இருக்கவும். அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு  கிளறும் போது திரண்டு கெட்டியாக வரும்.

இறுதியில், அடுப்பில் பாத்திரத்தை வைத்து  நெய்யை ஊற்றி  நறுக்கி வைத்துள்ள பாதாம், முந்திரி,ஏலக்காய் தூளை போட்டு பொரிந்ததும் வேகவைத்த கலவையில் போட்டு கிளறி விடவும்.

பின்பு  நெய் தடவிய தட்டில் மாம்பழ அல்வாவை கொட்டி 2 மணி நேரம் கழித்து துண்டுகளாக வெட்டி பரிமாறினால் சுவையான இனிப்பான மாம்பழ அல்வா ரெடி.

Categories

Tech |