மாம்பழ ஐஸ்க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்:
மாம்பழங்கள் – 3
தயிர் – 100 மில்லி லிட்டர்
தேன் – 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – 30 கிராம்
செய்முறை:
முதலில் மாம்பழங்களை எடுத்து சுத்தம் செய்து இரண்டாக வெட்டியபின், அதிலுள்ள சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.
பின்பு மிக்சிஜாரில் மாம்பழங்களின் வெட்டிய தசை பகுதியை போட்டு, தயிர், தேன், சர்க்கரை யை சேர்த்து மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு அரைத்த கலவையை ஒரு பவுலில் ஊற்றியபின், அதை ஃப்ரிட்ஜில் வைத்து, 2 மணி நேரம் கழித்து எடுத்து, அதை முட்டையை கலக்குகின்ற கருவியை வைத்து பிரிட்ஜில் வைத்த கலவையில் நன்கு கலந்தபின் மறுபடியும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
இதே போன்று 4 முறை அரைத்த கலவையை எடுத்து, கருவியால் நன்கு அடித்து பின்னர், ஃபிரிட்ஜில் உள்ளே வைத்தபின், அதை 5 மணி நேரம் கழித்து எடுத்து, ஐஸ்க்ரீம் கோன்களில் வைத்தோ அல்லது குழி கரண்டியால் எடுத்து அடுக்கி வைத்து பரிமாறினால், அருமையான ருசியில் சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.