Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மாம்பழத்தை… குழந்தைகள் சாப்பிடாமல் வேஸ்ட் ஆக்குறாங்களா ? அப்போ இந்த டிப்ஸ follow பண்ணுங்க..!!

மாம்பழ குச்சி ஐஸ் செய்ய தேவையான பொருள்கள்:

பால்                   – அரை லிட்டர்
அரிசி மாவு    – 2 டீ ஸ்பூன்
சீனி                    – 100 கிராம்
பாதாம்             – சிறிது
முந்திரி            – சிறிது
மாம்பழம்       – 1
நெய்                  – சிறிது

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், பாதம் பருப்பு, முந்திரியை போட்டு நன்கு வறுத்து கொள்ளவும்.

பின்பு  அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் பாலை ஊற்றி நன்கு வற்ற காய்ச்சி கொள்ளவும். பின்னர் மாம்பழத்தை எடுத்து தோல் நீக்கி, துண்டுகளாக  நறுக்கியதும் மிக்சிஜாரில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும்.

மேலும் அரிசி மாவை எடுத்து சீனியை சேர்த்து நன்கு கலந்ததும், அதை கொதிக்கின்ற பாலில் போட்டு கட்டி வராமல் சில நிமிடம் நன்கு கலந்து கிளறி கொள்ளவும்.

பிறகு கலந்த மாவானது நன்கு வெந்ததும், கலவை கெட்டியானதும் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆற வைக்கவும்.

மேலும் ஆற வைத்த பால் கலவையில், அரைத்த மாம்பழ கூழை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின்னர் ஒரு கிளாஸ்சோ  அல்லது குல்பி அச்சை எடுத்து, அதில் கலக்கி வைத்த பால் கலவையை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர வைக்கவும்.

இறுதியில் குளிர வைத்த மாம்பழ கலவையானதும் நன்கு உறைந்ததும் எடுத்து பரிமாறினால், அருமையான ருசியில், மாம்பழ குச்சி ஐஸ் தயார்.

Categories

Tech |