மாம்பழ ரப்ரி செய்ய தேவையான பொருட்கள்:
பால் – 2 1/2 கப்
கனிந்த மாம்பழகூல் – 1 கப்
சர்க்கரை – 1/4 கப்
பிஸ்தா – 6
பாதாம் – 4
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ – சிறிது
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் பாதாமை சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதன் தோலை நீக்கி, பாதம், பிஸ்தாவை துருவி எடுத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் பாலை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி, அதில் குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பிறகு மாம்பழ துண்டுகளை எடுத்து மிக்ஸிஜாரில் போட்டு, அதனுடன் சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்பு குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்து, பாலை நன்கு கொதிக்க விடவும். அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, குளிர வைக்கவும்.
மேலும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் குளிர வைத்த பாலை ஊற்றி, மாம்பழ கூழ் சேர்த்து, ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா, சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால்,சுவையான மாம்பழ ரப்ரி தயார்.