Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மாலை நேர ஸ்பெஷலாக… டீ க்கு ஏற்ற… காரசாரமான ருசி நிறைந்த… சுவையான ஸ்னாக்ஸ் செய்யலாம்..!!

மரவள்ளிக்கிழங்கு வடை செய்ய தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு                – 1/2 கிலோ
வெள்ளை மா                            – 1/4 கப்
பெருஞ்சீரகம்                            – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை                         – ஒரு கைபிடி
உப்பு                                               – தேவையான அளவு
பச்சை மிளகாய்                       – 3
வெங்காயம்                               – 1/2 கப்
எண்ணெய்                                 – தேவையான அளவு 

செய்முறை:

முதலில் மரவள்ளிக்கிழங்கை எடுத்து  மெல்லியதாக தோல் சீவியபின் கழுவி, கரட் துருவியில் துருவிக் கொள்ளவும். பின்பு வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை எடுத்து சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

மேலும் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு, வெள்ளை மா, பெருஞ்சீரகம்,கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு தூவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, வடைபோல்  தட்டி எடுத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி சூடானதும், பிசைந்த வடைகளை கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு, நன்கு இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும், கரண்டியால் வெந்த வடைகளை எடுத்து சில நிமிடம் எண்ணெய்யை வடிய வைத்து எடுத்து சூடாக பரிமாறினால் ருசியான மரவள்ளிக்கிழங்கு வடைரெடி.

Categories

Tech |