மசாலா கடலை செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 200 கிராம்
வறுத்த வேர்க்கடலை – 100 கிராம்
கடலை மாவு – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 250 மில்லி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதல்ல ஒரு பாத்திரத்துல அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், ருசிக்கேற்ப உப்பு தூவி, தண்ணீர் ஊற்றி நல்லா கெட்டியான பஜ்ஜி மாவு பதத்தில்ல ஓரளவு கெட்டியாக பிசைஞ்சி எடுத்துக்கணும்.
அடுப்பில அகலமான வாணலியை வச்சி, பொறிக்க தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி, நல்லா கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேர்க்கடலைகளை சிறிது சிறிதாக எடுத்து பிசைஞ்சி வச்ச மாவில் நனைத்ததும், கொதிக்கின்ற எண்ணெய்யில போட்டு, வேகுற அளவுக்கு நல்லா சிவந்ததும் எடுத்து பரிமாறினால் ருசியான மசாலா கடலை ரெடி.
குறிப்பு:
வறுத்த வேர்கடலைக்கு பதிலாக, கொண்டைக்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை பயன்படுத்தியும் செய்யலாம்.