மாதுளை லஸ்சி செய்ய தேவையான பொருள்கள்:
கெட்டி தயிர் – 1 கப்
மாதுளை விதைகள் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 3 தேக்கரண்டி
செய்முறை
முதலில் பாத்திரத்தில் மாதுளை பழத்தில் உள்ள விதைகளை எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சி ஜாரில் மாதுளை விதைகள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கிண்ணத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.
அதனுடன் வடிகட்டிய கலவையுடன், கெட்டி தயிர், சர்கரை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து சிறிது நேரம் கழித்து, அதை எடுத்து பரிமாறினால், சுவையான மாதுளை லஸ்சி ரெடி.