மேத்தி பன்னீர் செய்ய தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை – 1 கட்டு
தக்காளி – 3
பனீர் – 200 கிராம்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 3
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதல்ல தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கணும். பின்னர் நறுக்கி வச்ச இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை மிக்சிஜார்ல போட்டு நல்லா மையாக அரைச்சி எடுத்துக்கணும்.
பின்பு பன்னீரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கினதும், அடுப்புலகடாயை வச்சி, தண்ணீர் ஊற்றி, அதில் உப்பும், மஞ்சள் தூள் போட்டு, நறுக்கி வச்ச பன்னீர் துண்டுகளை போட்டு நல்லா வேக வச்சி இறக்கிகணும்.
பிறகு அடுப்பில நான்ஸ்டிக் தவாவை வச்சி சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கினதும், கழுவி வச்ச வெந்தயக்கீரையை போட்டு நல்லா சில நிமிடங்களுக்கு வதக்கியதும், அதுல அரைச்சி வச்ச தக்காளி விழுதை சேர்த்து நல்லா கிளறி விட்டுக்கணும்.
மேலும் கிளறி விட்ட கலவை நல்லா வதங்கினபிறகு, அதில் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு தூவி நன்கு கிளறவிட்டுசில நிமிடம் நன்கு கொதிக்க வைச்சி, கால் கப் தண்ணீர் சேர்த்து, மூடி வச்சி, கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கணும்.
கடைசில கொதிக்க வச்ச கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, வேக வச்ச பன்னீர் துண்டுகளை வடிகட்டியபிறகு, பன்னீரை மட்டும் வேக வச்ச கிரேவியில் சேர்த்து சில நிமிடம் நல்லா கொதிக்கவச்சதும், அதில் கரம் மசாலா தூவி நல்லா கிளறிவிட்டு கெட்டியானதும் இறக்கி பரிமாறினால், ருசியான மேத்தி பன்னீர் ரெடி.