மேத்தி ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள் :
முட்டை – 3
வெந்தயக்கீரை – அரை கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
சீரகம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெந்தையக் கீரையின் இலைகளை மட்டும் ஒரு பாத்திரத்தில் ஆய்ந்து எடுத்து கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், ஆய்ந்து வைத்த வெந்தயக்கீரை, கறிவேப்பிலையை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
ஒரு சிறிய பவுலில் முட்டையில் உள்ள வெள்ளைக்கருவை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து,லேசாக எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
மேலும் வெங்காயம் நன்கு வதங்கியபின், நறுக்கிய தக்காளியை போட்டு நன்கு குலையும் அளவுக்கு வதக்கியபின், அதனுடன் நறுக்கிய வெந்தயக்கீரையை போட்டு பாதிவேக்காடாக வெந்ததும் நன்கு கிளறிவிட்டதும் இறக்கி வைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு பெரிய பவுலை எடுத்து அதில் முட்டையில் உள்ள வெள்ளைக்கரு, வதக்கி இறக்கி வாய்த்த கலவையை போட்டு, ருசிக்கேற்ப உப்பு தூவி, மஞ்சள் தூள் போட்டு நன்கு கரண்டியால் கலக்கி கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடேறியதும், சிறிது எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்த முட்டை கலவையை தோசை போல் வார்த்து, அதன் சுற்றிலும் லேசாக எண்ணெய் விட்டு நன்கு வேக வைத்து வெந்ததும், அதை திருப்பி போட்டு பின்புறமும் வேக வைத்து எடுத்து, சூடாக பரிமாறினால் ருசியான மேத்தி ஆம்லெட் ரெடி.