Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லிக்கு, சப்பாத்திக்கு ஏற்ற… காரசாரமான ருசியில்… சூப்பரான மிளகு கார சட்னி..!!

மிளகு காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

தக்காளி                                   – பெரியது 5
காய்ந்த மிளகாய்                – 5
மிளகு                                       – 1 தேக்கரண்டி
வெந்தயம்                              – 3/4 தேக்கரண்டி
பெருங்காயம்                       – சிறிதளவு
நல்லெண்ணெய்                – 2 குழிக்கரண்டி
கடுகு, உளுந்தம் பருப்பு  – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை                    – 2 கொத்து
உப்பு                                          – தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் தக்காளியை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாயை போட்டு சிவக்க வறுத்து எடுத்ததும் அடுப்பை அணைத்து கொள்ளவும்.

அதே சூடான வாணலியில் மிளகை போட்டு நன்கு வெடித்ததும்  எடுத்ததும், அதே வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

பிறகு மறுபடியும் அடுப்பை எரிய வைத்து, அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, நறுக்கிய தக்காளியை போட்டு,சிறிது உப்பு சேர்த்து, தக்காளி நன்கு குழைய வதக்கவும்.

பின்னர் தக்காளியானது நன்கு வதங்கியதும் எடுத்து, ஆறவைத்ததும்  மிக்ஸிஜாரில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும்.

இறுதியில் கடாயை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதம், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதில் அரைத்த தக்காளி கலவையை போட்டு சிறிது கிளறி பச்சை வாசனை போன பின்  இறக்கி பரிமாறினால், சூடான  மிளகு கார சட்னி ரெடி.

Categories

Tech |