பால் போளி செய்ய தேவையான பொருட்கள் :
பொடித்த முந்திரி – தேவையான அளவு
பாதாம், பிஸ்தா – கால் கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
கோவா – கால் கப்
சர்க்கரை – கால் கப்
மைதா மாவு – முக்கால் கப்
கார்ன்ஃப்ளார் – கால் கப்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
பால் – 7 கப்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதாமாவு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து, அதில் சிறிது நெய் விட்டு நன்கு கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
பிறகு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாலை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, பாதியாக சுண்டும் வரை காய்ச்சிய பின்பு அதனுடன் சர்க்கரை, குங்குமப்பூவை கலந்து இறக்கி தனியாக வைக்கவும்.
மேலும் மற்றொரு பாத்திரத்தில் கோவா, முந்திரி, பாதாம், பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் தூவி நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு பிசைந்த மைதா மாவை எடுத்து சிறிய அப்பள அளவில் நன்கு தேய்த்தப்பின், அதில் முந்திரி பருப்பு கலவையை வைத்து, நன்கு அழுத்தி, வெளியில் வராத அளவுக்கு மூடி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் அப்பாளம் போல் தேய்த்து வைத்த மைதா போளிகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
இறுதியில் பொரித்து எடுத்த போளிகளை, சுண்ட காய்ச்சிய பால் கலவையில் போட்டு நன்கு ஊற வைத்துசிறிது நேரம் கழித்து பரிமாறினால் ருசியான பால் போளி ரெடி.