திணை பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
திணை – 1/2 கப்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 4 1/2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து 1/4 கப் நீரில் போட்டு அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவும்.
பின்பு பாத்திரத்தில் திணையை எடுத்து நீரில் 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும், அதனை அடுத்து மிக்ஸி ஜாரில் ஊறிய தினையை போட்டு கெட்டியான பதத்தில், மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு அரைத்து வைத்த தினையை பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் அரிசி மாவு, தேங்காய், வெல்லப் பாகு, உப்பு, சிறிது தண்ணீர்,பேக்கிங் சோடா, சேர்த்து நன்கு கலந்து, 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
அதனை யடுத்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்றியவுடன் அதிலுள்ள குழிகளில் எண்ணெய் தடவிய பின்பு அரைத்து ஊற வைத்த மாவை அதில் ஊற்றி, மூடி வைத்து 3 நிமிடம் வேக வைக்கவும்.
பின்பு, ஒரு கம்பியால் அதனை திருப்பிப் போட்டு, மீண்டும் அதை 3 நிமிடம் வேக வைத்து இறக்கி பரிமாறினால் தித்திக்கும் திணை பணியாரம் ரெடி.