Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்த ரவையில் செய்த… புதுவகையான இந்த ரெசிபிய… ரொம்ப சட்டுன்னு செய்து அசத்தலாம்..!!

மினி ரவை ஊத்தாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

ரவை                                  – 1 கப்
தயிர்                                   – 1 கப்
துருவிய இஞ்சி             – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம்                    – 2
தக்காளி                             – 1
பச்சை மிளகாய்            – 3
கொத்தமல்லி இலை – சிறிது
உப்பு                                    – தேவையான அளவு
எண்ணெய்                      – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதல்ல வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலையை தண்ணீர்ல நல்லா கிழுவியதும், சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கணும்.

பிறகு வாணலியை அடுப்பில வச்சி, அதில் ரவையை மட்டும் போட்டு சில நிமிடம் நல்லா வாசனை வரும் வரை வறுத்ததும், இறக்கியதும், அதை ஒரு பவுலில் போட்டு ஆற வைக்கணும்.

பின்னர் ஆற வச்ச ரவையில், தயிர், துருவிய இஞ்சி, ருசிக்கேற்ப உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு நல்லா கெட்டியில்லாமல் கலந்ததும், அதை 30 நிமிடம் நன்கு ஊற வைக்கனும்.

மேலும் மற்றோரு பௌல்ல நறுக்கி வச்ச வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லிஇலையை போட்டு நல்லா கலந்து கொள்ளணும்.

பின்பு, தோசைக் கல்லை அடுப்பில வச்சி, எண்ணெய் ஊற்றியபின், அதில் கலந்து வச்ச ரவை மாவில் ஒரு கரண்டி  ஊற்றி, அதை லேசாக தேய்த்தபின், அதன் மேல் கலந்து வச்ச வெங்காய கலவையை சிறிதளவு தூவி விட்டபின், அதன் சுற்றிலும் லேசாக எண்ணெய் ஊற்றி, நல்லா வேக வைக்கணும்.

இறுதியில் வேக வச்ச கலவையானது சிறிது நேரம் கழித்து, அதை கரண்டியால் கவனமாக திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால், ருசியான மினி ரவை ஊத்தாப்பம் ரெடி.

Categories

Tech |