Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பிரட், சப்பாத்திக்கு ஏற்ற… குழந்தைகளுக்கு பிடித்த… இயற்கையான பழங்களில்… எளிதில் செய்து அசத்துங்க..!!

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் செய்ய தேவையான பொருட்கள்:

ஆப்பிள்                     – 5
பப்பாளி                     – 1
பச்சை திராட்சை – 1 கிலோ
வாழைப்பழம்       – 3
ஸ்ட்ராபெர்ரி         – 8
அன்னாசி                 – 1
எலுமிச்சை சாறு – 1 1/2 டீஸ்பூன்
பட்டை                     – 2 துண்டு
சர்க்கரை                 – 1 கிலோ
பீட்ருட்                     – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஆப்பிள், பப்பாளி, வாழை பழம், அன்னாசி பழம்,பீட்ருட், எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு சிறு  துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் பச்சை திராட்சை, ஸ்ட்ராபெர்ரி பழங்களை போட்டு தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு மிக்சிஜாரில் நறுக்கிய பீட்ருட்டை போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு அகலமான நான்ஸ்டிக் தவாவை வைத்து, அதில் நறுக்கி வைத்த அன்னாசி, பப்பாளி, ஆப்பிள் துண்டுகள், வாழைபழம், பச்சை திராட்சை, ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் போட்டு முடி வைத்து, சில நிமிடம் நன்கு வேக வைத்து, இறக்கி ஆற வைத்து கொள்ளவும்.

பின்னர் மிக்ஸிஜாரில் ஆற வைத்த பழக் கலவையை போட்டு நன்கு மையாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.

மேலும் அதே நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து அதில் அரைத்த பேஸ்ட் கலவையை போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் பட்டை துண்டுகளை போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் அரைத்த பீட்ருட் கலவையை போட்டு, கரண்டியால்  நன்கு கிளறி விட்டு கொண்டே இருக்கவும்.

அடுத்து கிளறி விட்ட கலவையில் ருசிக்கேற்ப சர்க்கரையை போட்டு நன்கு கிளறிவிட்டபின், சில நிமிடம் கழித்து, ஓரளவு கெட்டியானதும், அதில்  போட்ட கிராம்பு துண்டுகளை கரண்டியால் நிக்கி விட்டு, ஓரளவு நன்கு கெட்டியானதும் இறக்கி ஆற வைத்து, பிரட் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறினால், ருசியான மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் ரெடி.

குறிப்பு:

இந்த மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்மை, சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பல நாட்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

Categories

Tech |