முளைகட்டிய நவதானிய சூப் செய்ய தேவையான பொருட்கள்:
முளைகட்டிய பயறுகள் – ஒரு கப்
வெங்காயம் – 1
பூண்டு – 2 பல்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
தனியா – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகு – காரத்துக்கேற்ப,
கொத்தமல்லி தழை – தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு – 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப் பால் – அரை கப்,
புளிக்காத கெட்டி தயிர் – அரை கப்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பயிறுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் பயிறு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, முந்தைய நாள் இரவே ஊறவைத்து பயிறுகளை முளைகட்ட வைத்தபின், மறுநாள் அடுப்பில் குக்கரை வைத்து அதில் முளைகட்டிய பயறுகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸிஜாரில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறில் பாதியளவு மட்டும் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அரைத்து வைத்த விழுதைப் போட்டு அதன் வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.
அடுத்து வதக்கிய கலவையுடன் , மீதமுள்ள வேக வைத்த பயறை போட்டு நன்கு வதக்கியதும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ருசிக்கேற்ப உப்பு தூவி நன்கு கொதிக்க வைத்து, அதில் தேங்காய்ப் பால் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி கொள்ளவும்.
இறுதியில் கொதிக்க வைத்த கலவையை எடுத்து, சாதத்துடன் பரிமாறுவதற்கு முன்பு, அதில் எலுமிச்சை சாறு, கெட்டியான தயிரை சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால், ருசியான முளைகட்டிய நவதானிய சூப் ரெடி.