முந்திரிப் பருப்பு குழம்பு செய்ய தேவையான பொருள்கள்:
முந்திரி பருப்பு – 50 கிராம்
தேங்காய்ப்பால் – அரை கப்
வெங்காயம் – 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
வற்றல் – 5
மல்லி – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து, அதில் முந்திரி பருப்பைபோட்டு சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு பொரிந்தவுடன், வெங்காயம், மிளகாய், கருவேப்பிலையை போட்டு நன்கு வதக்கவும். பின்பு வதங்கிய கலவையுடன் தேங்காய்ப்பால் ஊற்றி , உப்பு போட்டு வேக விடவும்.
பின்பு அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வெந்தவுடன், கெட்டியான தேங்காய்பால், முந்திரி பருப்பையும் சேர்த்து, குழம்பு ஒன்று சேரும் வரை 10 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான முந்திரிபருப்பு குழம்பு ரெடி.