Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக… அருமையான ருசியில்… சூப்பரான ரெசிபி..!!

முந்திரி சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன்                               – அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்         – 5
சீரகத்தூள்                       – ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள்                  – ஒரு ஸ்பூன்
முந்திரிபருப்பு              – 1 கைப்பிடி
வெங்காயம்                   – 1
தக்காளி                           – 1
எண்ணெய்                     – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு                                  – சிறிதளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில்  சிக்கனை எடுத்து துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு, தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழையை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும்.

அதன் பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டுகளை போட்டு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும். மேலும் அதே மிக்சி ஜாரில் காய்ந்த மிளகாயை போட்டு மையாக அரைத்துக்  கொள்ளவும்.

பின்னர்  பாதி முந்திரியை எடுத்து மிக்சிஜாரில் போட்டு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். மீதி பாதி முந்திரியை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு நறுக்கிய சிக்கனுடன், அரைத்த இஞ்சி, பூண்டு விழுதையை சிறிது போட்டு, நன்கு விரவி, முக்கால் மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,நறுக்கிய வெங்காயத்தை போட்டு, நன்கு வதக்கியதும் மீதியுள்ள இஞ்சி, பூண்டு விழுதை கொட்டி, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கியபின், நறுக்கிய தக்காளி துண்டுகளை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்

மேலும் அதனுடன் அரைத்து வைத்த காய்ந்த மிளகாய் விழுது, சீரகத்தூள், மிளகுத்தூள் தூவி,சிறிது கிளறியபின், அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு வதக்கியதும் தேவையான அளவு உப்பு தூவி,சிறிது கிளறி,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கன் வேகும் அளவுக்கு நன்கு கொதிக்க விடவும்.

பின்னர் சிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்த முந்திரி விழுது, நறுக்கிய முந்திரிபருப்பை போட்டு  நன்கு வேக வைத்து கொள்ளவும்.

இறுதியில் சிக்கன் நன்கு வெந்ததும், கெட்டியாக வரும் கிளறி விட்டு, கொத்தமல்லி தழை தூவியபின், இறக்கி பரிமாறினால், அருமையான ருசியில் முந்திரி சிக்கன் கிரேவி ரெடி.

Categories

Tech |