புழுங்கரிசி – கால் கப்
உளுந்து – அரை கப்
முருங்கை இலை – ஒரு கைப்பிடி அளவு (ஆய்ந்தது)
எள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
பெரிய வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் உளுந்து, புழுங்கல் அரிசியை எடுத்து தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைத்து எடுத்து மிக்சிஜாரில் போட்டு நன்கு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
பின்பு மற்றோரு பாத்திரத்தில் முருங்கைக் கீரையை ஆய்ந்து, நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
மேலும் கெட்டியாக அரைத்த மாவில் முருங்கை இலை, உப்பு, எள், பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி எடுத்து கொதிக்கின்ற எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான முருங்கைக் கீரை வடை ரெடி.