முருங்கைப்பூ – 2 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் முருங்கை பூவை மட்டும் ஆய்ந்து எடுத்து கொள்ளவும். பின்பு தேங்காய், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
மேலும் மிக்சிஜாரில் நறுக்கிய தேங்காய் துண்டுகள், பச்சை மிளகாய், சீரகம் போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள் பொடி, போட்டு சில நிமிடம் நன்கு வதக்கி கொள்ளவும்.
மேலும் வதக்கிய கலவையுடன், ஆய்ந்த முருங்கைப்பூ, சிறிதளவு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து சில நிமிடம் நன்கு வேக வைத்து தண்ணீர் வற்றியதும், கிளறி விட்டு இறக்கி பரிமாறினால், சுவையான முருங்கைப்பூ பொரியல் ரெடி.