மஸ்கோத் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
மைதா – 1/2 கப்
தேங்காய் – 1
சர்க்கரை – 1 1/2 கப்
முந்திரி – 10 தண்ணீர் -4கப்
செய்முறை:
மஸ்கோத் அல்வா செய்வதற்கு முந்திய நாளே, பாத்திரத்தில் மைதா மாவை எடுத்து, தண்ணீர் ஊற்றி, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அதை தண்ணீரில் போட்டு ஊற விடவும்.
பின்பு அதில் 3 கப் தண்ணீரை கூடுதலாக சேர்த்து பால் பத்திற்கு பிசைந்து கொள்ளவும். பால் போன்று இருக்கும் மைதா தண்ணீரை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
மறுநாள் வடிகட்டிய பாலின் மேலாடையை மட்டும் நீக்கி விடவும். தேங்காயை துருவி அதை மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து அதில் 3 கப் வரை தண்ணீர் விட்டு பிழிந்து தேங்காய் பாலை மட்டும் எடுத்து கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்த தேங்காய்பால், சர்க்கரை, முந்திரி பருப்பு மற்றும் மைதா பாலையும் சேர்த்தது, தொடர்ந்து கெட்டிப்பதம் வரும் வரை கலக்கி கொண்டே இருக்கவும்.
தேங்காய்பாலில் இருக்கும் எண்ணெய்யானது, தீயின் சூட்டில் வெளியே வந்து அல்வா வேக வைக்க சரியான பதத்திற்கு வந்து அல்வா சுருண்டு கெட்டியான பதத்திற்கு வந்து விட்டதும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறினால் சுவையான மஸ்கோத் அல்வா தயார். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.