Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முட்டு வாதத்தினால் அவதியா ? அப்போ… இந்த ரெசிபிய தொடர்ந்து சாப்பிடுங்க… உடனே சரியாகிடும்..!!

பெப்பர் காளான் செய்ய தேவையான பொருட்கள்:

எண்ணெய்                   – தேவையான அளவு
கடுகு, உளுந்து           – சிறிதளவு
கருவேப்பிலை          – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய்         – 1
மஞ்சள் தூள்                – அரை ஸ்பூன்
மிளகு தூள்                   – இரண்டு ஸ்பூன்
காளான்                          – 250 கிராம்
உப்பு                                 – தேவையான அளவு

செய்முறை:

முதல்ல காளானை தண்ணீர்ல நல்லா கழுவினயதும், அதனுடன் பெரிய வெங்காயம், பச்சை மிளகாயதையும் சின்ன துண்டுகளாக  நறுக்கி எடுத்துக்கணும்.

பிறகு அடுப்புல கடாயை வச்சி, சிறிது எண்ணெய் ஊற்றி சூடேறியதும், அதில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்ததும், நறுக்கி வச்ச வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு நல்லா சிவக்க வதக்கினபிறகு,
நறுக்கிய காளானை சேர்த்து  நல்லா வதக்கிக்கணும்.

மேலும் வதக்கிய காளானில் சில நிமிடம் கழித்ததும், அதில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றியதும், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நல்லா கிளறி விட்டதும், மூடி வச்சி கால் மணி நேரம் வேக விட்டு, இடையிடையே நன்கு கிளறிவிடவும்.

பின்னர் கிளறி விட்ட கலவையானது, நல்லா வெந்து தண்ணீர் வற்றி கெட்டியாக ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து இறக்கியபிறகு,கடைசியாக மிளகு தூளை சேர்த்து நல்லா கிளறி விட்டபிறகு சப்பாத்தியுடன் பரிமாறினால் ருசியான பெப்பர் காளான் ரெடி.

Categories

Tech |