Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மைசூர் சில்லி சிக்கன்… செய்து பாருங்க… ருசி அள்ளும்…!!!

மைசூர் சில்லி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன்                                  – கால் கிலோ
வெங்காயம்                       – 100 கிராம்
குடைமிளகாய்                 – 100 கிராம்
பச்சை மிளகாய்               – 5
இஞ்சி                                    – சிறிய துண்டு
பூண்டு                                  – 5 பல்
தேங்காய்த் துருவல்     – அரை கப்
வெள்ளை எள்                   – 1 டீஸ்பூன்
வேர்க்கடலை                  – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்            – 3
கறிவேப்பிலை                – சிறிதளவு
கொத்தமல்லித்தழை  – சிறிதளவு
மஞ்சள்தூள்                     – 2 சிட்டிகை
எண்ணெய்                        – 3 டீஸ்பூன்
உப்பு                                     – தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் சிக்கனை எடுத்து துண்களாக வெட்டியபின் சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
பின்பு குடைமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

அதனையடுத்து வாணலியை அடுப்பில் வைத்து அதில்  சிறிதளவு எண்ணெய் ஊற்றி  சூடானதும் காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, எள் சேர்த்து நன்கு  வறுத்து, மிக்ஸிஜாரில் போட்டு பொடியாக  அரைத்து கொள்ளவும்.

பின்பு அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய்யை  சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிக்கன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு  வதக்கவும்.

மேலும் அதனுடன் பொடியாக  அரைத்த கலவையை சேர்த்து , கறிவேப்பிலை, வெங்காயம், குடைமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை போட்டு  கிளறி இறக்கி பரிமாறினால் சுவையான
மைசூர் சில்லி சிக்கன் ரெடி.

Categories

Tech |