Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மார்பு சளியை…எளிதில் போக்க…இந்த டிஸ்ஸ…ட்ரை பண்ணி…பாருங்க..!!

நண்டு தொக்கு செய்ய  தேவையான பொருள்கள்:

கடல் நண்டு                                    – ½ கிலோ
பெரிய வெங்காயம்                      – 2
தக்காளி                                              – 2
பச்சை மிளகாய்                             – 2
இஞ்சிப்பூண்டு விழுது                – 1 டீஸ்பூன்
உப்பு                                                     – சிறிதளவு
எண்ணெய்                                       – தேவையான அளவு
மஞ்சள்தூள்                                     – ½ ஸ்பூன்
மல்லித்தூள்                                    – 2 ஸ்பூன்
மிளகாய்தூள்                                  – 1 ஸ்பூன்
மிளகுத்தூள்                                    – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை                              – ஒரு கைபிடி அளவு

செய்முறை:

முதலில் நண்டை எடுத்து துண்டுகளாக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு  ஆகிய அனைத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அதன்பின்பு நறுக்கிய இஞ்சி,பூண்டை மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.மேலும் அடுப்பில் வாணலியை வைத்து  எண்ணெயை ஊற்றி சூடானதும் அரைத்த இஞ்சிப் பூண்டு விழுதை சேர்த்து சிறிது கிளறியதுடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்,சிறிது  உப்புச் சேர்த்து வதக்கவும்.

பின்பு அதில்  தக்காளி சேர்த்து சிறிது  குழையும் வரை வதக்கி மஞ்சள்தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்கியபின் சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.

மேலும் சுத்தம் செய்த  நண்டுத் துண்டுகளை வேக வைத்த கலவையுடன் போட்டு நன்கு கிளறி விட்டு சிறிதளவு  தண்ணீர் ஊற்றியதும்  மூடிவைத்து  வேக வைக்கவும்.

இறுதியில் வேக வைத்த நண்டானது தண்ணீர் வற்றியதும் லேசாக  கிளறிய பின்பு, முடி வைத்து சில மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவையான நண்டு தொக்கு ரெடி.

Categories

Tech |