வேப்பம்பூ கொள்ளு சூப் செய்ய தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ – 4 டீஸ்பூன்
கொள்ளு – 50 கிராம்
மிளகு – 2 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 2
அன்னாசிப் பூ – 5 கிராம்,
நல்லெண்ணெய் – 25 மி.லி,
கடுகு – சிறிதளவு,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
பூண்டு – 50 கிராம்.
செய்முறை:
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கொள்ளுவை போட்டு நன்கு வறுத்தும், எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி வேப்பம்பூவை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூள்,அரைத்த கொள்ளுப் பொடியை சேர்த்து அதை கட்டி இல்லாமல் நன்கு கரைத்துகொள்ளவும்
இதில், மிக்சி ஜாரில் வறுத்த வேப்பம்பூ, உப்பு, மிளகு, பிரிஞ்சி இலை,பூண்டு, அன்னாசிப் பூ இவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்து, கொதிக்கின்ற கலவையுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
மேலும் கடாயை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, கொதிக்கின்ற கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான வேப்பம்பூ கொள்ளு சூப் தயார்.