நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள உதவுகிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக உதவுகிறது..
நெல்லிக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் – 6
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவுசெய்முறை:
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவுசெய்முறை:
முதலில் பெரிய நெல்லிக்காய்களை எடுத்து, அதில் உள்ள கொட்டை நீக்கியபின், அதை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகள், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சிறிதளவு உப்பு தூவி நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்ததும், அதில் கருவேப்பிலை,பெருங்காயத்தூள், அரைத்த நெல்லிக்காய் கலவையை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கியபின், இறக்கி பரிமாறினால், இட்லி தோசைக்கு ஏற்ற ருசியான நெல்லிக்காய் சட்னி ரெடி.