Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆப்பிள் சத்துக்களுக்கு நிகரான நெல்லிக்காயில்… குழந்தைகளுக்கு பிடித்த… ரொம்ப ஸ்வீட்டான… இந்த ரெசிபிய செய்து அசத்துங்க..!!

நெல்லிக்காய் அல்வா செய்ய தேவையானப் பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் – 10
நாட்டு சர்க்கரை            – 200 கிராம்
நெய்                                    – 100 மில்லி
ஏலக்காய்த்தூள்            – தேவையான அளவு
முந்திரிப் பருப்பு            – சிறிதளவு
கேசரி பவுடர்                  – ஒரு சிட்டிகை

செய்முறை:

அடுப்புல பாத்திரத்தை வச்சி, தண்ணீர் ஊற்றி நல்லா கொதித்ததும் இறக்கினதும், அதுல நெல்லிக்காயை போட்டு அரைமணி நேரம் நல்ல ஊற வச்சதும், நெல்லிக்காயின் விதையை நிக்கினபிறகு, பூவாக உதிர்த்ததும், மிக்சிஜாரில் போட்டு அரைச்சிக்கிடனும்.

மேலும் அடுப்புல கடாயை வச்சி, நெய் விட்டு உருகியதும், முந்திரி பருப்பை போட்டு, லேசாக சிவக்க வறுத்து எடுத்துக்கணும். பிறகு அதே கடாயில் கூடுதலாக நெய் விட்டு சூடேறியதும், அரைச்சி வச்ச நெல்லிக்காய் கலவையை போட்டு நல்லா சில நிமிடம் வதக்கிக்கணும்.

பின்னர் நெல்லிக்காய் நல்லா வதங்கினதும், அதில் நாட்டு சர்க்கரைய போட்டு நல்லா உருகுற அளவுக்கு கிளறிவிட்டபின், அதில் ஏலக்காய் தூள், கூடுதலாக நெய் சேர்த்து லேசாக பிரட்டி விட்டபிறகு, வறுத்து வச்ச  முந்திரிப்பருப்பை சேர்த்து  கிளறி வீட்டு, நெய் திரண்டு கெட்டியாக வந்ததும் இறக்கி பரிமாறினால் ருசியான நெல்லிக்காய் அல்வா ரெடி.

Categories

Tech |